வவுனியா காவல் துறை மூன்று வாரங்களில் மீண்டும் பொலிஸ் நிலையமாக மாற்றம்!!

47


வவுனியா காவல் துறை


மூன்று வாரங்களின் பின் மீண்டும் வவுனியா பொலிஸ் நிலையம் என பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது.வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோட்டபாயவின் வருகையை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி காவல் துறையாக மாற்றம் அடைந்தது.


புதிய ஜனாதிபதி கோட்டபாய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து,


வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்ப லகையில் ‘காவல் துறை’யாக மாற்றமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று வாரங்கள் காவல் துறை என்ற பெயர் பலகையுடன் இயங்கிய நிலையில் தற்போது மீண்டும் பெயர் பலகை பொலிஸ் நிலையம் என மாற்றப்பட்டுளட்ளது.