வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : இருவருக்கு காயம்!!விபத்து


வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி, வங்கி ஒன்றிற்கு சொந்தமான வாகனம் ஓமந்தை – விளக்குவைத்தகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓமந்தை பகுதியை இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.