மன்னாரில் டெங்கு காய்ச்சல் காரணமாக உ யிரிழக்கும் பொலிஸ் அதிகாரிகள்!!மன்னாரில்..


மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று உ யிரிழந்துள்ளார்.மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தரான பி.சீ.பியரத்தின கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.


இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் வீட்டிற்கு சென்ற எஸ்.ரத்னாயக்க டெங்கு காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உ யிரிழந்துள்ளார்.


இவர் அனுராதபுரம் தளாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் அதிகாரி எனத் தெரியவருகின்றது. இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா என பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.