யாழில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்டு இருவர் பலி!!

590

ஸ்ரீதேவி எக்ஸ்பிரஸ் ரயிலில்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதுண்டு இருவர் உ யிரிழந்துள்ளனர். இன்று (15.01.2020) காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குருநாகல் நயிலிய ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவையினை கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரியில் பயணித்த இருவர் உ யிரிழந்துள்ளனர்.

ரயில் குறித்த காரை மோதி சற்று தூரம் இழுத்து சென்றுள்ளதுடன் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்பலகையினையும் சேதப்படுத்தியுள்ளது.


உ யிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.