வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா!!

57


பொங்கல் விழா


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான தர்மபால செனவிரட்ன தலைமையில் இப் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


இதன்போது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கமும், ஒற்றுமையும் ஏற்பட வலியுறுத்தி பொங்கல் செய்து வர்ணபகவானுக்கு படைத்து இந்து முறைப்படி பூஜை மேற்கொண்டு வழிபட்டனர். அத்துடன் இனிப்புக்களை பரிமாறியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


குறித்த பொங்கல் நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சமூக பா துகாப்பு வேலைத்திட்டத்திற்கான இணைப்பாளருமான கேணல் ரட்ணபிரிய பந்து,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல, வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் பிரிவு அமைப்பாளர் பிறேம், கட்சியின் வட்டார தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.