இலங்கையில் காணாமல்போன தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!!

797

திய நடைமுறை

இலங்கையில் கா ணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் இலகுவான நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

புதிய முறைக்கமைய ஒரு நபரின் கையடக்க தொலைபேசி கா ணாமல் போனால் மு றைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதற்கு பதிலாக இணையத்தளம் ஊடாக அதற்கான மு றைப்பாடுகளை மேற்கொள்வதற்கு உரிய நபருக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக www.ineed.police.lk/ என்ற இணையத்தளம் ஊடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

எவ்வாறு மு றைப்பாடு செய்வது என்பதை தெளிவுபடுத்தும் காணொளி ஒன்றும் அந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.