வல்வெட்டித்துறையில் கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா!!பட்டத் திருவிழா


தைத்திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.நூற்றுக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். தைத்திருநாளில் பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை.


இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்காக பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.