வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு வடமாண எல்லைக்குட்பட்ட மாவட்டங்களை இணைத்து நடாத்திய சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற மகுடத்தின் கீழ் கிளிநொச்சியில் உழவர் பெருவிழா சிறப்புற நடைபெற்றது.
வடமாகாண அமைச்சர் ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள, சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் கு.மிகுந்தன், பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், ந.சிவசக்தி ஆனந்தன், மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதறை அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சுகாதார சுதேசிய வைத்திய அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் விவசாய அமைச்சின் உயர்அதிகாரிகள் உட்பட விவசாயப் பெருங்குடிமக்கள் கலந்து கொள்ள உழவர் பெருவிழா மண்டபம் மக்கள் கொள்ளாமல் நிறைந்து வழிய சிறப்புற நடைபெற்றது.
உழவர் பெருவிழா 2014ன் சிறப்பு நிகழ்வாக தமிழக கவிஞரும் பாடலாசிரியருமான கவிஞர் யுகபாரதி தலைமையில் கவிஞர்களான கை.சரவணன் வைத்தியகலாநிதி க.சுதர்சன் வைத்தியகலாநிதி கி.குருபரன் பொன்.காந்தன் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம் ஆகியோர் கலந்துகொண்ட கவியரங்கம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்பெருவிழாவினை யாழ் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் இ.சர்வேஸ்வரா தொகுத்தளிக்க நன்றி உரையினை அமைச்சின் செயலாளர் வழங்க விழா சிறப்புற நிறைவுபெற்றது.





