வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளராக கமலதாசன் பதவியேற்பு!!



புதிய பிரதேச செயலாளராக கமலதாசன்


வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ந.கமலதாசன் நியமிக்கப்பட்டார்.



வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளாரான ந.கமலதாசன் இன்று (16.01.2020) காலை 9.15 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


கடமையினை பொறுப்பேற்கும் வைபவத்தில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.தினேஸ்குமார், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.