கிளிநொச்சி ஏ9 வீதியில் இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீதம்!!ஏ9 வீதியில்


கிளிநொச்சியில் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.ஏ9 வீதியில் உள்ள கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், பாரவூர்த்தி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.