ஜனாதிபதி அறிமுகப்படுத்தும் இலத்திரனியல் அட்டை : நன்மை அடையவுள்ள மக்கள்!!இலத்திரனியல் அட்டை


குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விசேட இலத்திரனியல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் நபர்கள் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.


அத்துடன் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஒரு இலட்சம் தொழில் வாயப்பு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கான நடவடிக்கை இறுதி கட்டத்தையடைந்துள்ள நிலையில் 20ஆம் திகதி முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.