ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் : இலங்கை அணி 5ம் இடத்தில்!!

493

ICCசர்வதேச கிரிகெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.

இந்த நிலையில் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை, இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

இந்த தொடரை வெற்றிகொள்ளத் தவறும் பட்சத்தில் இந்திய அணி தரப்படுத்தலில் முதலிடத்தை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் 114 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், 111 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தென் ஆபிரிக்கா நான்காவது இடத்திலும் இலங்கை அணி ஐந்தாவது இடத்திலும் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் முறையே ஏழாம் எட்டாம் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.