யாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைப்பு!!

441

யாழில்..

யாழ்ப்பாணத்தில் வங்கி முகாமையாளர் ஒருவரின் காரை அடையாளம்தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – 3ம் கட்டை, கல்வியங்காடு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காரே இவ்வாறு நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முகாமையாளரின் வீட்டுக்குள் நுழைந்த அடையாளம்தெரியாத நபர்கள் சிலர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்கு தீவைத்துள்ளனர்.

இத் தீ விபத்தினால் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.