யாழ் பட்டத் திருவிழாவில் பல லட்சம் பேரை கொள்ளை கொண்ட தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பட்டத்திற்கு முதலிடம்!!

509

யாழ் பட்டத் திருவிழா

வடமராட்சி வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் வினோத விசித்திர பட்டப்போட்டித் திருவிழா வெகு விமரிசையாகப் பொங்கல் தினமான புதன்கிழமை (15) இடம்பெற்றது.

வல்வை இளைஞர்களின் பல்வேறு கைவண்ணங்களிலாலான பட்டங்கள் வானில் பறந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பட்டப் போட்டியைத் திரண்டு பார்வையிட்டனர்.


அதில், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு, யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி வானில் பறந்த பிரசாந் என்பவரின் பட்டம் முதலிடத்தைத் தட்டிக் கொண்டது.

யாழ் வல்வை பட்டப் போட்டியில் 5 வருடங்களாக முதலிடத்தை பெற்று சாதனை படைத்த இளைஞன் : குவியும் வாழ்த்துக்கள்!!

வல்வை பட்டத் திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய மகேந்திரன் பிரஷாந்திற்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன.

இம்முறையும் 1,2,3 இடங்களை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

பிரசாந் அவர்களின் பட்டத்தை பார்த்த பல்லாயிரகணக்கான மக்களுக்கு ஆச்சரியத்தையும் வியப்பை தந்துள்ளது. அவரின் அபார திறமையால் தொடர்ந்து 5 வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளது என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

வல்வெட்டித்துறை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மகேந்திரன் பிரசாந் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாழ்த்துவது சுலபம். ஆனால், இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.