வவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை!!

35


விசேட பூஜை


பாகிஸ்தானில் எதிர்வரும் 23.01.2020 தொடக்கம் 26.01.2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து விளையாடவுள்ள வவுனியாவை சேர்ந்த ஏழு குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை நிகழ்வு இடம்பெற்றது.வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை 8.00 மணிக்கு ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.


இலங்கை தேசிய அணிக்குள் இடம் பிடித்துள்ள ஏழு வவுனியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் மற்றும் வீரர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.