நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

425

கோர விபத்து

கதிர்காமம் – கொழும்பு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.50 மணியளவில் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் பேருந்து சாரதி, பேருந்தில் பயணித்த நபர் ஒருவரும், பெண் ஒருவரும் 3 வயதுடைய சிறுமி ஒருவருமே உ யிரிழந்தனர்.

குறித்த நால்வரும் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே உ யிரிழந்துள்ளனர்.

அத்துடன் பேருந்து மற்றும் டிப்பரில் பயணித்த 7 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.