உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் : அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?

464

கொரோனா வைரஸ்

சீனாவில் துவங்கி இன்று உலக நாடுகளை அ ச்சுறு த்தி வரும் கொரோனா வைரஸ் என்றால் என்ன… அதன் அறிகுறிகளை கண்டறிவது எப்படி?

சார்ஸ் நோயில் இருந்து மீண்ட சீனா, இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இருபது நாட்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அ ச்சத்தில் உறைந்துள்ளன.

மெர்ஸ் மற்றும் சார்ஸ் இரண்டும் கலந்த கலவையே, இந்த கொரோனா வைரஸ் ஆகும். சாதாரண சளி, இருமல் பிரச்சனையை போலதான் இதன் அறிகுறி இருக்கும் என்றும்,

உரிய முறையில் கண்டறியப்படாவிட்டால், மெல்ல, மெல்ல பாதிப்பு அதிகமாகி, உயி ரை கொ ல்லும் ஆ பத்தை உடையது என்றும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. கொரோனா வைரஸ் ஒருவரிடம் பரவும்போது, அது முதலில், நுரையீரலைத் தான் பாதிக்கின்றது.

இதன்மூலம், நுரையீரல் அழற்சிக்குள்ளாகி, லேசான காய்ச்சல், அதனைத் தொடர்ந்து 2 முதல் 7 நாட்களில் வறட்டு இருமல் உருவாகிறது. இதையடுத்து மூச்சுவிடுவதில் அவ்வப்போது ஏற்படும் சிரமம் ஏற்படும். Coronavirus நாளடைவில் மூச்சுவிடுவதே சிரமம் என்ற நிலையை உருவாக்கிவிடும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி நாளடைவில் மெல்ல, மெல்ல அதிகமாகும்போது, ஜன்னி என சொல்வழக்கில் அழைக்கப்படும் நிமோனியா காய்ச்சல் ஏற்படும். முடிவில், சிறுநீரகம் செயலிழந்து, ம ரணம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மெர்சும், சார்சும் கலந்த கலவையாக இருப்பதால், கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டவை என்றும், இதனால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும், சளியை துப்பினாலும், அதன்மூலமாக கூட வைரஸ் காற்றில் கலந்து, மற்றவர்களுக்கும் பரவிட கூடிய அபாயம் இருக்கிறது.