விபத்து
வவுனியா ஏ9 வீதியில் இன்று (23.01.2020) காலை 6.30 மணியளவில் மாட்டுடன் மோதுண்டு லொறி விபத்துக்குள்ளானது.
ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி வவுனியா ஏ9 வீதியில் சோயா வீதிக்கு அருகே மாட்டுடன் மோதுண்டு வீதியின் மறுபக்கம் சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் லொறி வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890