வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் : 2ம் நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம்!!

502

குப்பை மேடு விவகாரம்

வவுனியா – புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டினை அகற்றும்படி கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு ஆர் ப்பாட்டம் இன்று (23.01.2020) இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என ஆ ர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடாமல் உள்ளன. இந்நிலை தொடர்பில் இன்று நகரசபையில் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.