எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு திடீர் சுகயீனம்!!

1239

SPB

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆபிரிக்காவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார்.

தென்னாபிரிக்கா ஜோகன்ஸ்பர்க்கில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட இருந்தது.

இந் நிலையில் எஸ்.பி.பி.,க்கு திடீரென உடல் நலம் குன்றியது. இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. எஸ்.பி.பி. இந்தியா திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.

இவர் தமிழில் நடித்த கேளடி கண்மணி மற்றும் சிகரம் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது.