நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகளும், இரண்டாவது திருமணம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை வனிதா, தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
நடிகை வனிதா, நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதன் பிறகு, ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பெண் குழந்தையை வனிதா வளர்த்து வருகிறார். தந்தை ஆகாஷ் வீட்டில் தான் வாழ்வேன் என்று வனிதாவின் மகன் போர்க்கொடி தூக்கியதால் இப்பிரச்னை பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரை சென்றது.
இதன் பிறகு ஆனந்த்ராஜுவும், வனிதாவும் பிரிந்தனர். தற்போது, ஆண் குழந்தை, முதல் கணவர் ஆகாஷ் வீட்டில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில்,தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் ராபர்ட்டுடன் வனிதாவுக்கு காதல் ஏற்பட்டது. ராபர்ட்டை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து, வனிதாவிடம் கேட்டதற்கு நானும் ராபர்ட்டும் நல்ல நண்பர்கள். எங்கள் முடிவு என்ன என்பது குறித்து அறிக்கையாக வெளியிடுவோம் என்றார்.
இதன்படி நேற்று இருவரும், கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்தனர்.
அறிக்கையில் நானும் ராபர்ட்டும் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்கள் நட்பு இருவர் குடும்பத்தினருக்கும் தெரியும். அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். விரைவில், இருவரும் இணைந்து, சினிமா தயாரிப்பு நிறுவனம் துவங்க உள்ளோம். எங்கள் திருமணம் குறித்த அதிகாரபூர்வ செய்தியை விரைவில் தெரிவிப்போம் என கூறப்பட்டுள்ளது.