வவுனியாவில் ஏ9 வீதியினை மறித்து போராட்டம்!!

493

ஆசிரியர் பற்றாக்குறையினை..

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (24.01.2020) காலை கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மடுக்கந்தை தேசிய பாடசாலையில் 80 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டும் ஆனால் தற்போது 35 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுக்கின்றனர்.

எமது பாடசாலையில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களினால் இக் கவனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு வலய கல்விப் பணிமனைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போ ராட்டத்தின் பின்னர் ஏ9 வீதியினை மறித்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் போ ராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி ஒரு வார காலத்தினுள் தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

தீர்வினை எழுத்து மூலம் தருமாறு போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்த நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்பாக எழுத்து மூல கடிதத்தினை வாசித்துக்காட்டியதுடன் அவர்களிடம் கடித்தினை கையளித்தார்.

மடுக்கந்தை பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய் முடியாத நிலை காணப்பட்டது. மத்திய கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டதுடன் ஒரு வார காலத்தினுள் இதற்குரிய தீர்வினை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

விரைவில் குறித்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வோம் என வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன் பின்னர் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போ ராட்டம் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.