மன்னாரில் இதுவரை 39 மனித எலும்புக் கூடுகள் மீட்பு!!

686

Mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கை இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனித புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதாக அநுராதபுரம் வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் தனஞ்சய வைத்தியரட்ண தெரிவித்தார்.

தற்போது வரை 39 மனித எலும்புக் கூட்டு பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் – மாந்தை திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் நீர் குழாய் திருத்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் இந்த மனித எலும்புக்கூடுகளை கண்டுள்ளனர்.

இதன் பின்னதாக குறித்த ஊழியர்களினால் பொலிஸருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எவ்வாறாயினும் இதுவரை மேற்கொண்ட அகழ்வின்போது முழுமையான மனித எலும்புக்கூடு எதுவும் மீட்கப்படவில்லை.