கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

478


கொரோனா வைரஸ்



சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகின்றமையே இதற்கு காரணமாகும்.



காய்ச்சல், இருமல், தடுமல், மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




வேகமாக பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றினால் நிமோனியா மற்றும் சிறுநீர் கோளாறு உட்பட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட கூடும். கொரோனா வைரஸ் ஆ பத்தை தடுப்பதற்கு மேற்கொள்ள கூடிய நடவடிக்கை தொடர்பில் சுகாதார அதிகாரிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கை கழுவுதல், கிருமி நாசினி பயன்பாடு, இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டை அல்லது திசு பயன்படுத்துமாறும், பயன்படுத்திய கைக்குட்டையை அவதானமாக குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டை அல்லது திசு இல்லை என்றால் முழங்கையின் உள் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


தும்மும்போது கைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் ஏற்படும் அ பாயத்தைத் தவிர்க்க காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உணவுக்காக தயாரிக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.