இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்!!

253

புதிய சட்டம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை பா துகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுக்கநெறி மற்றும் மத ரீதியாக அவமதிக்கும் கருத்து மற்றும் பதிவுகள் வெளியிடுவதனை நிறுத்த இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக முறையற்ற பதிவுகளை தடை செய்வதற்கு புதிய சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை உடனடியாக தயாராகிக்குமாறு பா துகாப்பு செயலாளர் மேஜர் கமல் குணரத்ன, இலங்கை கணினி அவசர பிரச்சார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கண்கானிப்பின் கீழ் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சைபர் பா துகாப்பு சட்டமூலத்தின் மூலம் கடன் அட்டை, போலி தகவல், இணையத்தளங்களுக்குள் அனுமதியின்றி நுழைதல், அரசாங்கத்திற்கு எதிராக சைபர் கு ற்றங்களை தடுப்பதல் உட்பட பல விடயங்களை தடுப்பதே நோக்கமாகும்.