வவுனியாவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து சோதனை : மோப்பநாயும் களத்தில்!!

586

வவுனியாவில்..

வவுனியா ஏ9 வீதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இன்று காலை முதல் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு சோ தனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்போது வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கையில் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

பொதிகளுடன் வருபவர்களும் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.