இலங்கையர்கள்..
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தனிமைப்பட்ட நகரமான அதனை சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வாழும் இலங்கையர்கள் உணவு இன்றி தவித்து வருவதாக தெரிய வருகிறது. இது தொடர்பில் வூஹானிலுள்ள இலங்கையர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
11 மில்லியன் மக்கள் வாழும் வூஹான் பிராந்தியத்தில் விமான நிலையம், பொது மற்றும் தனியார் போக்குவரத்து என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு எவரும் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ சீன அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் வுஹான் மற்றும் சிவுஆன் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய சிவுஆன் பிராந்தியத்தின் சென்டு நகரத்தில் வாழும் 150 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விமான சேவை தெரிவித்துள்ளது.