கொரனோ வைரஸ்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

சீனாவின் வுஹான் மாகாணத்தில், உயிர் கொல்லி நோயான கொரோனா வேகமாக பரவி வருவதால், தற்போது வரை இந்த நோயின் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் ப லியாகியிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா திப்படைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பா திக்கப்பட்டவர்களில் சிலர் நல்ல நிலையில், இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, வுஹான் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் எப்படி கண்காணித்து வருகின்றனர், உதவுகின்றனர் என்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அதில், தலை முதல் கால் வரை உடை அணிந்திருக்கும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அவர்களை காப்பாற்ற போ ராடி வருகின்றனர்.

மேலும் இப்படி வைரஸால் பா திக்கப்பட்டவர்களுக்கு செவிலியர் உதவிய போது, அவருக்கும் இந்த நோயின் தா க்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர் ஏழு மாத கர்ப்பிணி பெண் எனவும், அவரை மட்டுமின்றி அவருடைய 70 வயதான தாயுக்கும் கொரோனோ வைரஸின் பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.




