கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் : உதவி செய்தவர்களுக்கு தீவிர சோதனை : அ ச்சத்தில் மக்கள்!!

466

சீனப் பெண்

உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்ந்தும் அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த பெண் மத்திய மாகாணம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த பெண்ணின் சுற்றுலா பயணத்தின் போது அவருக்கு உதவியவர்களுக்கு தீவிர சோ தனை நடத்துமாறு மத்திய மாகாண சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மத்திய மாகாணத்தில் பல பகுதிகளில் மக்கள் அ ச்சமடைந்துள்ளதுடன் வீடுகளுக்கு மு டங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தேவையற்ற அ ச்சம் கொள்ள வேண்டாம் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் மத்திய மாகாணத்திற்குள் பயணம் மேற்கொண்ட குறித்த சீன பெண்ணுக்கு உதவிய 6 பேரை பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பயணித்த அனைத்து இடங்களையும் சோ தனையிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தப் பகுதிகளிலுள்ள எவருக்காவது காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய்குறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை இரண்டு சீனப் பெண்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.