கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் தகவல்களை வைத்து நாட்டு மக்கள் அ ச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க கூறுகையில்,
சமூக ஊடகங்கள் ஊடாக பரிமாற்றப்படும் விடயங்கள் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்த வேண்டும்.

தவறான சில தகவல்கள் பொது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
கொரோனா வைரஸ் தொடர்பில் ஏதேனும் பொது மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின் சுகாதார அமைச்சினை தொடர்பு கொள்ள முடியும்.

அதற்காக இரு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பிரிவு : 071 0107107, அனர்த்த பிரிவு: 011 3071073/ 071 3071083




