
மலையாள நடிகர் பஹத் பாசிலை மணம் முடிக்கவுள்ளார் நஸ்ரியா நசீம். மலையாள உலகில் மோஸ்ட் வான்டட் ஹீரோ பஹத் பாசில், இவர் இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.
2013ம் ஆண்டில் மட்டும் 12 படங்களில் கமிட் ஆகி நடித்த இவர் முன்பு ஆண்ட்ரியாவைக் காதலிக்கிறேன் என்று பரப்பைக் கிளப்பியவர் இப்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.
பஹத் பாசிலின் மனம் கவர்ந்த அந்தப் பெண் நஸ்ரியா நசீம். நேரம் படத்தில் அறிமுகமாகி ராஜா ராணி, நய்யாண்டி’ படங்களில் நடித்தவர்.
பெற்றோர்கள் நிச்சயித்த இவர்கள் திருமணம் வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கிறது. முப்பது வயதான பஹத் 18 வயதான நஸ்ரியாவைக் கரம் பிடிக்கிறார்.





