யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவியொருவர் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ். அல்லைப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது,
இன்று திங்கட்கிழமை காலை வழமை போன்று பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த குறித்த மாணவி தனது பெற்றோர் வெளியில் சென்ற சமயம் பார்த்து வீட்டின் சுவாமி அறைக்குள் சென்று சுடிதார் துப்பட்டாவினால் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சிலமணி நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் மகளைக் காணாது தேடிய போது சுவாமி அறையில் மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு கூக்குரலிட்டனர்.
சத்தம் கேட்டு அயலவர்கள் உடனடியாக வந்து பார்த்த போது குறித்த மாணவி உயிர் பிரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு இறந்தவர் யாழ். அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவரின் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.





