இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி : தொடர் சமநிலையில் முடிவு!!

498

CRICKET-UAE-PAK-SRIஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை சார்பில் பிரசன்ன ஜயவர்த்தன 49 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்த்தன 46 ஓட்டங்களையும் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 428 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 341 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ரெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் முடிவடைந்துள்ளது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அசார் அலியும் தொடரின் சிறப்பாட்டக்காரராக அஞ்சலோ மத்தியுசும் தெரிவுசெய்யப்பட்டனர்.