வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்லத்திறனாய்வுப் போட்டி நேற்று 30/01/2020 வியாழக்கிழமை பாடசாலையின் முதல்வர் திரு, விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படிஇல்லத்திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக திரு. இ.இளங்கோவன்(செயலாளர்,)
கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு) சிறப்பு விருந்தினராக திருமதி அன்னமலர் சுரேந்திரன்(வலயக்கல்விப்பணிப்பாளர் ,வவுனியா வடக்கு) ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை சமூகத்தினரின் பங்களிப்புடன் இல்லத்திறனாய்வுப் போட்டி சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



























