தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதைத் தடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்!!

336

Phoneதொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் எனப்படும் பிளாக்போன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

பிறரிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை இந்த வகையான ஸ்மார்ட்போன்கள் வேறு குறியீட்டு வடிவில் மாற்றும் தன்மை கொண்டவை. இதனால், மற்றவர்களின் தொலைபேசிக்குள் ஊடுருவி உண்மையான தகவல்களைக் கண்டறிவது தடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனை அமெரிக்காவைச் சேர்ந்த “சைலன்ட் சர்க்கிள்” நிறுவனமும், பிரான்ûஸச் சேர்ந்த “ஜீக்ஸ்போன்” நிறுவனமும் இணைந்து தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக்போனின் பிரதான நோக்கமே ஒரு நபரின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பதுதான் என்று சைலன்ட் சர்க்கிள் நிறுவனத்தின் தலைவர் பில் ஸிம்மெர்மன் தெரிவித்துள்ளார்.