வவுனியா குருமன்காட்டில் திடீரென அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி!!

560

குருமன்காட்டில்..

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.02.2020) காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

திடீரென அமைக்கப்பட்ட இச் சோதனைச் சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் மக்கள் ஒருவித அ ச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம், காணொளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை வைத்துள்ளனர்.