வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

703

மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (31.01.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் அணி நடை வகுப்பு, பந்துப்பரிமாற்றம், கொடி கொண்டு ஒடுதல், பழம் பொறுக்குதல், கயிறு இழுத்தல், பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர், ஆசியர் நிகழ்ச்சி, பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் பிரதம விருந்தினராக சட்டத்தரணி பு.கிரிசாந்தன் கலந்து சிறப்பித்திருந்ததுடன்,


சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் சீ.மரியநாயகம் மற்றும் கௌரவ விருந்தினராக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், பழைய மாணவ சங்க செயலாளர் ப.கார்த்தீபன்,

பாடசாலை அபிவிருந்திச் சங்க செயலாளர் கி.டினேஸ் றொஷின்ரன், வவுனியா பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க மற்றும் விருந்தினர்களாக அயல் பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.