வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு அணிநடை ஒத்திகை!!

29


அணிநடை ஒத்திகை


இலங்கையின் 72வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம்திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றையதினம் (01.02.2020) அணிநடை ஒத்திகை இடம்பெற்றது.சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 04.02.2020 அன்று இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான பாடசாலை மாணவர்களின் அணிநடை ஒத்திகை இன்று இடம்பெற்றிருந்தது.


வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் மேற்பார்வையின் கீழ் இவ் அணிநடை ஒத்திகைகள் இடம்பெற்றிருந்தன.