வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஓமந்தை பொற்கோவில் நிர்வாகத்தினரின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

726

வவுனியா ஓமந்தை அரசர்பதி (பொற்கோவில்) கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் 50 பேருக்கு கோவில் தர்மகர்த்தா அரசர் வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்களால் ஒரு லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (20.01) செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

123456