தீவிரமடையும் கொரோனா வைரஸ் : உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

522

கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்புக்குள்ளாகி உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. இது 2002- 2003 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் தொற்றினால் இறந்தோரின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

நேற்று வரை இந்த தொற்றினால் உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 304 ஆக இருந்த நிலையில்,14300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிதாக மேலும் 56 பேர் இந்த தொற்றினால் உ யிரிழந்துள்ளதையடுத்து 360 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் பிலிப்பைன்ஸில் சீனர் ஒருவரும் உ யிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.