கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

417

பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற சொகுசு பேருந்தொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.