வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!!

795

சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோணிக்கல் கிராம சேவையாளர் அலுவலகத்திலும் இன்று (04.02.2020) காலை 7.29 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிராமசேவையாளர் க.பரராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக கிராம சேவையாளர் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தோணிக்கல் கிராம அலுவலக வளாகத்தில் மரம்நாட்டும் வைபவமும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.