கொரோனா வைரஸ் : இலங்கையில், 20 பேருக்கு சிகிச்சை!!

627

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகத்தில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் குணமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன.

சீனப் பெண்ணின் இரத்த மாதிரிகள் மற்றும் உமிழ்நீர் என்பன தினமும் பெற்று பரிசோதனை செய்யப்படுவதாக ஐ.டி.எச் என்ற தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையின் விஷேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட மூன்று விமானப் பணிப்பெண்கள் இன்று ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வரை இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 20 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தமது விமான சேவைக்கான கொடுப்பனவை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பெற்றுக் கொள்வதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.