தென்னிலங்கையிலுள்ள உணவகத்தில் பெற்ற சிற்றுண்டிக்குள் பூரான்!!

408

சிற்றுண்டிக்குள் பூரான்

தென்னிலங்கையிலுள்ள உணவகம் ஒன்றில் பெற்றுக்கொண்ட சிற்றூண்டியில் பூரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலி அஹங்கம – ஷாரிபுத்ர வித்தியாலயத்தில் உள்ள உணவகத்தில் பெற்றுக் கொண்ட உழுந்து வடைக்கு பூரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வடை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவன் அதிபர் ஊடாக ஹபராதுவ சுகாதார சேவை வைத்திய அதிகாரிகள் அலுவலத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய உணவகத்திற்கு எ திராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு பாடசாலை உணவகத்தில் மாணவன் உழுந்து வடை ஒன்று பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர் மாணவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து வடையை பகிர்ந்த சந்தர்ப்பத்தில் இந்த பூரானை அவதானித்த மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வடையை பொறுப்பெடுத்த அதிபர் உணவகத்திற்கு எ திராக முறைப்பாடு செய்துள்ளனர்.