எஞ்சிய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவை : ஐஸ்லாந்து ஜனாதிபதி தெரிவிப்பு!!

478

Grimsionமுரண்பாடு முடிவுற்றதை தொடர்ந்து இலங்கை தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால அவகாசம் மிக அவசியமானது. அதைவிடுத்து காலவரையறை நிர்ணயிப்பது பயனளிக்காது என்று ஐஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி ஒலாபுர் ரக்நர் கிறிம்சன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐஸ்லாந்து ஜனாதிபதி அபுதாபி நகரில் நேற்று சந்தித்து இருபக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை தாம் இதற்கு முன்னர் இரு தடவைகள் சந்தித்ததை நினைவு கூர்ந்ததுடன், மீண்டும் அவரை சந்திக்கக் கிடைத்ததையிட்டு திருப்தியையும் அவர் வெளியிட்டார்.