இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

524

முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுவதாக பிரச்சாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கம் கேட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வைத்தியர் டெனிஸ்டர் எல் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வைரஸ் என்பது விஞ்ஞான துறை மற்றும் மருத்துவ துறைக்கு எப்போதுமே பாரிய சவாலான ஒரு விடயமாகும். எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இலங்கையில் மருந்துகள் விற்பனையாகின்றன.

கொரோனா போன்ற வைரஸை நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகளினால் கட்டுப்படுத்த முடியாது. அத்துடன் இந்த நோயை குணப்படுத்த என்னால் முடியும் என எந்தவொரு தனி நபரால் கூறப்பட்டாலும் விஞ்ஞான ரீதியாக அவ்வாறு முடியாது.

சீன அதிகாரிகளும் அதற்கு இன்னமும் உரிய மருந்தினை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர். நான் இலங்கை கடைகளில் லேபல் மாற்றி விற்பனை செய்யப்படும் மருந்துகளை அவதானித்தேன். அவற்றினை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 562 பேர் உ யிரிழந்துள்ளனர்.

சமகாலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் நெருக்கிய தொடர்புகள் உள்ளதால் அங்கிருந்து வருபவர்களால் நாட்டில் வைரஸ் தொற்று ஏற்படலாம் என மக்கள் அ ச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.