குளிர்பானம் என நினைத்து மதுவை அருந்திய மாணவன் பலி!!

267

studentகேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிகாடு பகுதியை சேர்ந்தவர் லாஜித். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி சுஜி. இந்த தம்பதியின் மகன் லிஜீன் (8). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் லிஜீன் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல லிஜீன் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினான்.

வீட்டில் அவன் விளையாடிக்கொண்டு இருந்தபோது பெற்றோர் மட்டும் வெளியில் கிளம்பி சென்றனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. வீட்டின் உள்ளே லிஜீன் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தான்.

இதனால் பதறி போன பெற்றோர் மகனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்கு ஓடினார்கள். அங்கு லிஜீனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவன் பரிதாபமாக இறந்து போனான்.

மேலும் அவனை பரிசோதித்த வைத்தியர்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் தான் லிஜீன் இறந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இதுபற்றி பாலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னிகாடு பொலிஸார் அங்கு சென்று லிஜீனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கட்டிட தொழில் செய்து வந்த லாஜித்துக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் வெளிநாட்டு மதுபான பாட்டில்களை வாங்கி தனது பீரோவில் வைத்து இருந்தார். அந்த மதுவை குளிர்பானம் என்று தவறுதலாக நினைத்து அவரது மகன் லிஜீன் குடித்து உள்ளான். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவனுக்கு வாந்தி– மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவி உள்ளான்.

இந்த தகவல்கள் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.