கொரோனா நோயாளியிடமிருந்து விலகி ஓடும் தாதிகள் : அதிர வைக்கும் வீடியோ!!

543

தாதிகள்

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நோயாளியிடமிருந்து செவிலியர்கள் விலகி ஓடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோ நோய் தோன்றிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள தடுப்பு காப்பகத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் நோய் தடுப்பு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

காப்பகத்தில் அடிப்பைட வசதி மட்டுமே உள்ளதாகவும், நோய் கண்டறியும் சாதனங்கள் கூட இல்லை, செவிலியர்கள் கவனிப்பும் சரியில்லை என உள்ளுர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில் காப்பகம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர், கோபமடைந்து திட்டிய படி செவிலியர்களுக்கு அருகே செல்கிறார். நோயாளி அருகில் வர வர அவர்கள் விலகிச்செல்கின்றனர்.

செவிலியர்கள் பா துகாப்பு உடை அணிந்து சிகிச்சை அளித்தாலும், பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் நோயை பரப்பும் நோக்கத்தோடு, அவர்களின் மாஸ்கை கழட்டி எச்சில் துப்புவதாகவும் கூறப்படுகிறது.