திருப்பதி கோவிலில் குவிந்த 40 தொன் வெளிநாட்டு நாணயங்கள்!!

550

Coinதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள்.

இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல கட்டங்களில் முயற்சி செய்தது ஆனால் ரூபாய் மதிப்பை விட அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைக்குரிய செலவு அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் வெளிநாட்டு நாணயங்கள் கோவிலில் தேக்கமடையத் தொடங்கியது. தற்போது கோவிலில் 40 தொன் வெளிநாட்டு நாணயம் தேக்கமடைந்து உள்ளது. இதன் மதிப்பு 10 கோடி என கூறப்படுகிறது.

இதில் மலேசியா நாட்டு நாணயம் மட்டும் 4.7 தொன் உள்ளது. அமெரிக்க டொலர் 300 கிலோ உள்ளது. இதனை இந்திய கரன்சிக்கு மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியிடம் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் யோசனை கேட்டனர். அவர்கள் யோசனை படி நாணயங்கள் சி ஏலத்தில் விட தேவஸ்தானம் முடிவு செய்து அறிவித்தது.

இதில் பல்வேறு நிபந்தனைகளும், தொழில் நுட்ப சிக்கல்களும் இருந்ததால் ஏலம் கேட்க யாரும் முன் வரவில்லை. இதையடுத்து நிபந்தனைகளை தளர்த்த தேவஸ்தானம் முன் வந்துள்ளது. இதையடுத்து தற்போது 6 நிறுவனங்கள் ஏலம் கேட்க பதிவு செய்துள்ளது. ஏலத்தில் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.