சீன பொருட்களுக்கு..

கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக சீனாவில் இருந்து வரும் கப்பல் பொருட்களை திருப்பியனுப்பும் செயற்பாடுகளில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் தாம் இறக்குமதி செய்த பொருட்கள் வருகின்ற போதும் அதனை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு இலங்கையின் இறக்குமதியாளர்கள் த யக்கம் வெளியிடுகின்றனர். சில இறக்குமதியாளர்கள் பொருட்களை திருப்பியனுப்பியும் உள்ளதாக தெரியவருகிறது.

சீனாவின் பொருட்கள் இவ்வாறு நிராகரிக்கப்படுமானால் வரும் வாரங்களில் சீன பொருட்களுக்கு சந்தையில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று அ ச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை தமக்கு பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று சீனாவில் உள்ள தமது பங்காளி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் ஆட்கள் மத்தியிலேயே பரவும் ஆபத்து கொண்டிருக்கிறது. அது பொருட்களின் ஊடாக பரவாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




